Friends and Fans of MICHAEL

Wednesday, December 07, 2016

கீனா 4 #என்_நாடு_என்_மக்கள்

காமராஜர் நாடாரா? யாரு சொன்னா? அவரு எல்லலாருக்கும் பொதுவானவரு. நான் மூப்பனாரு. இங்கப் பாருங்க சார் நான் எதுக்குமே அசிங்கப்பட மாட்டேன். சவதி கூட அள்ளிப் போடுவேன். இப்போது தான் நான் என் கைபேசியில் பதிவு செய்திருந்த கீனாவின் பேச்சைக் கேட்டுப் பார்த்தேன். அதிகம் இல்லை என்றாலும் சுமார் ஒரு மணி நேரம் நான் அனுபவித்ததை சில நிமிடங்களில் சுருக்கித் தரலாம் என்று நினைத்து இன்று எழுத நினைத்ததை நிறுத்திக் கொள்கிறேன். இதோ நான் தொகுத்த கீனா வீடியோ.

கீனா 3 #என்_நாடு_என்_மக்கள்

"அங்கப் பாருங்க சார். அதெல்லாம் சாமியா? இல்ல. முருகன் தான் சாமி. இந்தாங்க பிரசாதம், திருநீறு பூசிக்கிறீங்களா? என்ன இதுல எல்லாம் நம்பிக்க இல்லியா? அப்போ நீங்க வேதமா? எந்த வேதம்? மூணு வேதம் இருக்குல்லா? என்ன எல்லாம் ஒண்ணு தானா? நான் கூட ஏசுவுக்கு மெழுவுத்திரி எல்லாம் பொருத்தி வச்சிருக்கேன். ஏசுவ மாதிரி என்னையும் சிலுவையில அடிப்பாங்களா? வீட்டுல அடிச்சாலும் சரி, ஊருல அடிச்சாலும் சரி, ஆத்துல அடிச்சாலும் சரி... அன்னைக்கி ஆத்துல குளிச்சிட்டு இருக்கம்போது எவனோ இருநூறு ரூபாய எடுத்துட்டுப் போயிட்டான். சருவப் பையில போட்டு வச்சிருந்தேன். இங்கப் பாருங்க இந்த சருவப் பை மாதிரி தான். என்னப் பாத்து கீனான்னு கூப்பிடுவானுங்க. என் பேரு கிருஷ்ணன். கீனாவாம்... நான் கெட்ட வார்த்த சொல்லித் திட்டிப்புடுவேன். நீங்க இருக்கீங்க. வாயில கெட்ட வார்த்த வருது. நீங்க என்ன எப்படி கூப்புடுவீங்க சார். "பெரியவரு".  பாருங்க சார் நீங்க நல்லவரு. பெரியவருன்னு சொல்லுதீங்க. கீனாவாம். எனக்கு கோவம் வரும். அதான் அப்படித்தான் திருச்செந்தூர்ல ஆபீசர் கிட்ட பேசும் போது கோவம் வந்துட்டு. கெட்ட வார்த்த சொன்னேன் அவரு திட்டிப்புட்டாரு. நான் இங்கப் பாருங்க இப்படி வாயப் பொத்திக்கிட்டு கடல் பக்கமா போயிட்ட்டேன். எனக்கு கோவம் வரும் சார். என் பொண்டாட்டி எனக்கு மரியாதையே தரமாட்டா. கொண்டையப் பிடிச்சு இழுத்து அடிச்சிப்புடுவேன். வீட்டுக்குப் போனா காப்பி குடிக்கியளான்னு கேக்க மாட்டா. நீங்க எனக்கு டீ வாங்கிக் குடுத்தீங்க. எவ்வளவு சார் ஒரு டீ ? என்ன பத்து ரூவா குத்தீங்களா? சில்லற தரலியா? அடுத்த பெட்டியில போய் அவங்கிட்ட மீதிக் காச வாங்கணும் சார். விடக்கூடாது. திருநவேலியில போய் அவங்கிட்ட கேக்கணும். முருகன் கூட தெய்வானை கிட்ட கோவிச்சுக்கிட்டுத் தான் வள்ளிய கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. நானும் இன்னொருத்திய கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு முருகன் கிட்ட சொல்லிட்டேன். அவரு சரின்னு சொல்லிட்டாரு. நான் சுகமில்லாமப் போயிட்டா பாத்துக்கணும் இல்லியா? வேட்டியத் தொவச்சிப் போடணுமில்லா?"

"உங்களுக்கு கல்யாணம் ஆயிட்டா? பிள்ளங்க எல்லாம் இருக்கா? ஆகலியா? அப்பா அம்மா இருக்காங்களா? இல்லியா ? அப்போ நாம ரெண்டு பேரும் ஒண்ணு. உங்க அம்மா உங்களுக்கு எத்தன வயசு இருக்கும் போது செத்துப் போனங்க? நான் ஏழு வயசா இருக்கும் போது எங்க அம்மா செத்துப் போயிட்டாங்க. நான் இவ்வளவு உயரம் தான் இருந்தேன். அங்கப் பாருங்க அந்தா தூங்கிட்டு இருக்குதே அந்தப் பிள்ள அது மாதிரி தான் நான் இருந்தேன். எனக்கு என்ன தெரியும். அழணுமா சிரிக்கணுமான்னு தெரியுமா? உங்க அம்மா எறந்து எத்தன வருஷம் ஆவுது? மூணு வருஷமா? அப்போ உங்களுக்கு அம்பது வயசு இருக்குமா? உங்களுக்கு ஐக்ரவுண்டு ஆஸ்பத்திரி தெரியுமா? நீங்க பாளயங்கோட்ட தான எப்பிடி தெரியாம இருக்கும். அங்க எனக்கு மனநிலம சரியில்லன்னு மருந்து குடுத்தாங்க. என் காலுல ஒரு புண்ணு இருக்கு. இங்கப் பாருங்க. டாக்டரு தான் மருந்து போட்டு விட்டாரு. "

"கலைஞரு எனக்குப் பிடிக்கும். அவரு குடுத்த பென்சன் தான் நான் வாங்கிட்டு இருக்கேன். வேற யாருகிட்டயும் நான் வாங்க மாட்டேன். இப்ப நான் வாங்கறதும் கலைஞர் குடுத்தது தான். எல்லாவனுங்களுக்கும் பண ஆச. காமராசரப் பாருங்க. அவரு பணத்துக்கே ஆசப்படல. அவரு செத்துப் போனது இங்கப்   பாருங்க இப்படி செத்துப் போனாரு. எல்லாவனுவளும் தடவித் தடவி தேடிப் பாத்தானுங்க. ஒரு வேட்டி ஒரு சட்ட. நூறு ரூபா தான் இருந்தது. அறுநூறு கோடி ரூபா எல்லாம் கடத்துறானுங்க. காமராசர் மாதிரி வருமா. அவரு தாங்க கடவுளு. அவர நீங்க என்ன சொல்லி கூப்புடுவீங்க? தலைவருன்னா? அவர மாதிரி தலைவரு இப்போ யாரு இருக்கா?"

இன்றைய காத்திருப்புக்கும் முடிவு வரப் போகிறது. அடுத்து நான் தான் மேனேஜரைப் பார்க்கப் போக வேண்டும். மீண்டும் அடுத்த காத்திருப்பில் கீனா-4 வது (கடைசி) எபிசோடில் சந்திப்போம்.

கீனா 2 #என்_நாடு_என்_மக்கள்

கீனாவின் வார்த்தைகளை நெல்லைத் தமிழில் அப்படியே வார்த்தைக்கு வார்த்தை என்னால் எழுத முடியவில்லை. தென்காசிப் பகுதியின் வாசனை தூக்கலாக இருந்தது. இனி கீனா. "நான் ரொம்ப நாளா திருச்செந்தூர் போயி முருகனப் பால்கணும்னு ஆசையா இருந்தது. இப்பத்தான் முடிஞ்சுது. அங்க ஒடைக்கிற தேங்காய பொறுக்கிப் போடறவங்களுக்கு மாசம் நாலாயிரத்து ஐநூறு ரூவா சம்பளமாம். நான் ஆயிரத்து ஐநூறு தாங்க போதும்னேன். அவங்க கேக்கல. அப்படின்னா நாலாயிரத்து ஐநூறே தாங்க. நான் மத்த வேலையும் சேத்து செய்யிறேன்னு சொன்னேன்."

என் பதிலையோ, விருப்பு வெறுப்பு பற்றிய எதிர் செயல்களைப் பற்றியோ அவர் எந்தக் கவலையும் இல்லாமல், ஓலைப் பாயில் நாய் ஒண்ணுக்கு அடித்தது போல பேனிக் கொண்டே இருந்தார். டீ குடித்த முக்கால் நிமிட நேரம் மட்டுமே அவர் பேசாமல் இருந்தார்.

"நீங்க படிச்சவங்க தானே ஸார். நானும் எட்டாவது வரைக்கும் படிச்சிருக்கேன். நாம ரெண்டு பேருமே படிச்சதுக்கு காரணம் யார் தெரியுமா?

காமராஜி. அவரு முருகன் மாதிரி, கடவுள் தான் ஸார். அவருக்கு மீச இருந்துச்சு. கண்ணாடி போட்சிருந்தாரா? நீங்க எல்லாம் கண்ணாடி போட்டிருக்கீங்க. நீங்க ப்ராமணனா? சொல்ல மாட்டீங்களா? உங்களுக்கு சொந்தக்காரங்க அம்பாசமுத்திரத்துல இருக்காங்களா? ஆழ்வார் திருநகரியில? ஆழ்வார் குறிச்சியில? சார் படம் எடுக்கீங்களா? நல்லா எடுங்க. அந்த பனை மரத்த படம் எடுங்க."

ஆழ்வார்திருநகரி ரயில்நிலையம் வந்திருந்தது.  "திருநவேலி வந்திருச்சா? இல்லையா? டீக்காரன். யாருக்குய்யா உன் டீ வேணும்? எங்கிட்ட காசு இல்ல. சார் மாதிரி யாராச்சும் வாங்கிக் குடுத்தா குடிக்கலாம். சார் எனக்கு வாங்கிக் தாரீங்களா? சார் நீங்களும் குடிங்க. குடிக்க மாட்டீங்களா?"

இங்கு தான் அந்த முக்கால் நிமிட அமைதி கிடைத்தது. சுமார் ஐந்தாரு பொங்கல் பண்டிகை சூழலில் நான் நண்பர்களோடு ஏறி இறங்கிய அந்த வல்லநாட்டு மலையைப் படம் பிடித்தேன்.

"சார் அது என்ன ஃபோன் சார்? என்ன விலை? சொந்தக்காரவுங்க வாங்கிக் குடுத்தாங்களா? எனக்கும் என் மவன் நோக்கியா ஃபோனு வாங்கிக் குடுத்தான். ஆயிரம் ரூவா. நல்லா இருக்கும் சார். என்னையும் ஒரு படம் பிடியுங்களேன். கொஞ்சம் இருங்க. சட்டையில பட்டன் மாட்டிக்கிறேன். சார் அந்தப் படத்தக் காடுங்க. நம்ம ரெண்டு பேரும் சேந்து ஒரு படம் எடுக்கணும் சார். எப்படி?  நீங்க எந்த ஊரு? பாளையங்கோட்டையா? பாளையங்கோட்ட திருநவேலிக்கு முன்னாலயா? திருநவேலிக்கு முன்னால பாளையங்கோட்டையா? நாம் ரெண்டு பேரும் போயி போட்டா பிடிக்கிற எடத்துல போயி படம் பிடிப்போம். நான் உங்க வீட்டுக்கு வரட்டுமா?"

உங்கள நான் படம் பிடிக்கேன். குடுங்க. குடுக்க மாட்டீங்களா? சரி"

காத்திருப்பு முடிவுக்கு வந்துவிட்டது. பாங்க் மேனேஜர் வந்துவிட்டார். நான் ஏன் இங்கே வந்தேன் என்பது இன்னொரு சோகமும் எதிர்பார்ப்புகளும் கலந்த கதை. அதைப்பற்றிப் பேச  நாளை மாலை வராசொல்லியிருக்கிறார் மேனேஜர். கதை எழுதும் அளவு (படங்களோடு) தகவல்கள் சேர சில மாதங்கள் ஆகலாம். அடுத்த காத்திருப்பில் கீனா வருவார்.


கீனா! #என்_நாடு_என்_மக்கள்

பல ஆண்டுகளுக்குப் பின் நினைவுகள் மலர, உறவுகள் துளிர்க்க பல அனுபவங்கள் கிடைத்தன. எனக்கு நெல்லை மைக்கேல் என்று பேரும் வைத்து பல கேம்ப்புகளில் சோறும் போட்டு ஆதரிக்கும் பாஸ்ட்டர். தாமஸ் தேவா பிரகாசபுரம் ஆலயத்தில் போதகராக இருக்கின்றார். அங்கே ஒரு சிறு கூட்ட இளைஞர்களை சந்தித்தது உள்ளுக்குள் துள்ளலைக் கொடுத்திருந்தது. ஆறேகாலுக்கு ரயில் இருப்பதாகச் சொன்னதும் ரயில், சிக்கு புக்கு என்று உள்ளே பயணத்தைத் துவங்கிவிட்டிருந்தது.  கிறிஸ்மஸ் நிகழ்ச்சி ஒன்றில் கிட்டாரிஸ்ட் நண்பர் ஒருவரின் ஆசைக்காக அவர் பாட, இரண்டே கார்டுகளில் முழுப் பாட்டையும் நான் இசைத்து முடித்த அந்த மலரும் நினைவை நாசரேத் ரயில் நிலையத்தில் கொண்டாடவும்,  சிறுவயது முதல் அடங்காத எனது ரயில் பயண ஆசையையும் தீர்க்க அருமையான வாய்ப்பு கிடைத்தது. கடைசி பஸ் போய்விட்டதால்  நியூஸ் பேப்பர் விரித்து நாங்கள் உட்கார்ந்து, படுத்து, தண்டவாளத்தில் நடைபயின்ற அதே நாசரேத் ரயில் நிலையம் தான். ஆனால் பழைய சின்ன கட்டிடம் சிதைந்து போய் கிடந்தது.  பாஸ்டர் என்னை டூ வீலரில் இறக்கி விடவும் போண்டா மணி மாதிரி ஒருவர் ஓடி வந்து "பத்து ரூபா குடுங்க" என்றார்.  பார்க்கிங் சார்ஜ் பத்து ரூபாயா? அதுவும் நாசரேத்துலயா? என்று வியந்தாலும், பாஸ்டர் தாமஸ் உடனே கிளம்பி விட்டதால் போண்டாவை
அலட்சியம் செய்து டிக்கட் வாங்க வரிசையில் நின்றேன். குரோட்டன் செடி பற்றிய அருமையான கருத்து சொன்னார் பாஸ்டர். அதே விஷயமாகத் தான் உடனே அவரும் போகவேண்டியிருந்தது. அந்த குரோட்டன் ப்ரின்சிபிள் இப்படி பொதுவான இடத்தில் பகிரப்படுவது நல்லதல்ல. ஆர்வம் மிக்கவர்கள் நேரில் என்னைப் பார்க்கும் போது கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அல்லது இரவு பத்து மணிக்கு மேல் ஃபோன் பண்ணுங்கள்.  போண்டாமணி டிக்கட் கவுண்டர் வரை என்னைத் தொடர்ந்து பத்து ரூபா பத்து ரூபா என்று கேட்டுக் கொண்டே வந்தார். சாப்பிட காசு வேண்டும் என்று சொன்னார். நான் ஒதுங்கிக் கொள்ள, இன்னொருவரைத் தொடர்ந்தார் அவர்.

போண்டாமணிக்குக் கொடுக்காத அந்த பத்து ரூபாயை ரயிலில் இழக்கப் போவது தெரியாமல் ப்ளாட்ஃபாரத்துக்குள் நுழைந்தேன். அகல ரயில் பாதை மட்டுமல்ல, புது கட்டிடம், அகலமான, நீளமான, சுத்தமான ப்ளாட்ஃபார்ம் தான் எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. ஒரு அங்கிள் ஆறுமணிக்கே கையில் டார்ச் லைட்டுடன் எதிர் பக்கத்து ப்ளாட்ஃபாரத்தில் வாக்கிங் போய்க் கொண்டிருந்தார்.

ரயில் வந்தது. ஞாயிற்றுக் கிழமையாக இருந்ததால் கூட்டம் அதிகமாக இல்லை. ஆனால் ரயிலின் உள்ளே ஓரளவு கூட்டம் இருந்தது. படம் பிடிக்க வசதியாக ஜன்னல் ஓரத்தில் இடம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கும் போதே என் எதிரே, ஜன்னல் ஓரத்தில் ஒரு ஒற்றை இருக்கை தனியாக வா வந்து உக்காரு என்று அழைத்தது. எனக்கு மட்டும் என்ன நடக்கப் போகிறது என்று முதலிலேயே தெரிந்திருந்தால் வேறு பெட்டிக்கே போயிருப்பேன். ஆனால் விதி விளையாடி விட்டது. எத்தனை பேர் அந்த இருக்கையிலிருந்து எழுந்து ஓடிப் போனார்களோ?

எதிரில் உட்கார்ந்திருந்த அந்தப் பெரியவர் ஏனோ லார்ட் ஆஃப் த ரிங்ஸ்-இன் கோலம் போலத் தெரிந்தார். நாசரேத் தொடங்கி பாளையங்கோட்டை வரை எனது பதில்களையோ கவனத்தையோ பற்றி கவலையே படாமல் நான் ஸ்டாப் ஆகப் பேசிக் கொண்டே வந்தார். "உங்க வீட்டுக்கு வரட்டுமா? " என்றும் கேட்டார்.

திருச்செந்தூரில் முருகனைப் பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார் கீனா என்று அழைக்கப்படும் கிருஷ்ணன். எழுபது வயது இருக்கும். சைக்காலஜி, தியாலஜி, அந்த்ரோபாலஜி, எத்திக்ஸ், பாலிட்டிக்ஸ், சினிமா என்று அவர் தொடாத சப்ஜக்ட்டே இல்லை. அதுவும் என் கைகள், தொடையில் தொட்டுத் தொட்டு பேசிக் கொண்டே இருந்தார்.

காந்தியும் பிரபல எழுத்தாளர்களும் என் அபிமான ஆளுமைகளும் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளில் தான் அதிகம் கற்றுக் கொண்டதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். இங்கே நான் சொல்ல வருவது நான் ஒரு எழுத்தாளன் என்றோ, வருங்கால எழுத்தாளன் என்றோ பிரபலனாகப் போகின்றவன் என்றோ அல்ல. ஒரு எழுத்தாளன் என்பவன் மனப் பிரழ்வு உள்ளவன் என்று அண்மையில் நான் வாசித்ததும் எழுத்தாளன் என்றால் சமுதாயத்துல நடக்கற விஷயங்களப் பாத்து சாவணும், வாசிக்கிறவன சாவடிக்கணும் என்ற எழுத்தாளர் கண்மணி சேகரனின் கூற்றும் என் எதிரில் இருந்த கீனா ஒரு எழுத்தாளர் என்று உரக்கக் கூவின. அந்த எழுத்தாளனை உங்களுக்கு அறிமுகப்படுத்தப் போகிறேன். (இப்போது என் காத்திருப்பு முடிந்து மருத்துவர் உள்ளே அழைக்கிறார். என்ன மருத்துவர் எனக்கு என்ன பிரச்சனை என்பதை 14 நாட்கள் சிகிச்சை முடிந்ததும் சொல்கிறேன். அதுவும் ஒரு சுவராசியமான தலைப்புத் தான்.) கீனா அவர்கள் நிறுத்தாமல் பேசின அந்த தொடரி டயலாக்குகளை நினைவுபடுத்தி எழுதுவேன். 

Monday, October 13, 2008

My Tamil article published in a magazine!

Please check this out

http://navinavirutcham.blogspot.com/search/label/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D

Tuesday, August 05, 2008

Sorry about the name. I thought it was chennai gathering. Anyway we have established the name in our blog and other contacts. Please visit the following to see the chennai gathering July 2008 pictures.

 

http://picasaweb.google.com/samcbv/ChennaiFellowship

Monday, July 21, 2008

the get-together at Chennai


It was really a great reunion of the friends.

the trichy connection was really renewed and a few new friends were
also included.

It all started when some of us met during the wedding of Konar (Ezra) in Thirunintravur. The importance of a get-together was felt strongly and Inba, (Mr.Trichy), Duck 3 (Vimal) (he didn't turn up at the get-together),and Ooty Sam (he is now in Chennai), Call Taxi Singer Silvanus and myself worked towards that.

The following responded by attending the get-together.

1.Solomon (duck 2)and his wife Kanmani - they hosted us in their home.
2.Raymond (Kallar street) and his wife plus Price his son
3.Jean Walter (the speeding scooter)and his wife
4.Silvanus
5.Inba
6.Ooty Sam
7.Zigan
the following were our new friends:
8.Wilson Paul (Mahima)
9.Thomas Nirmal (Compassion)

we had a nice time of singing, sharing and praying. We have decided to meet like this very often.

I met the following at the railway station:

1.Jebakumar (ding dong)
2.Tony
3.Silvanus
4.Tina (the yfc committee member)

Labels:

Saturday, December 01, 2007

M.B.A in 24 hours.

M.B.A in 24 hours.
Moses'Business Administration

A famous Indian Missionary Leader declared that 'Delegation' was and is not God's will. “Jethro, a pagan priest from Median had misled Moses.” 1he reasoned. A peep into that leader's character helped me understand how his attitude influenced his interpretation.

Christian leaders should incorporate the acceptable principles of management experts. Of course, there are risks involved; But the risks should never prevent us from attempts.

Dr.Larry Crabb, the Gold medallion award winning author of Christian counseling books, talks about Spoiling the Egyptians.2 “When Moses led the children of Israel out of Egyptian bondage, he took freely of the goods of the Egyptians to sustain God's people on their journey to the Promised Land. God not only approved of this “spoiling” (taking from), but also planned for it to happen and intervened to make it happen. Spoiling the Egyptians is .... a delicate and risky task, appropriate for the Christian and sanctioned by God but by no means free of real danger....we can profit from secular psychology if we carefully screen our concepts to determine their compatibility with Christian presuppositions.” What Dr.Larry says about psychology is applicable to any field. If spoiling Egyptians is permissible, adapting a Median priest's idea should be O.K.
'D Plan' of Jethro

1.Moses must be the representative before God. He should teach people the
decrees and laws and show them the way to live and the duties they are to perform.
2.Moses must Select capable men from all the people
a. men who fear God / b. trustworthy / c. who hate dishonest gain
3.Appoint them as officials over 1000s, 100s, 50s and 10s.
4.Have them serve as judges for the people all the times.
5.Have them bring every difficult case to Moses
6. do this so God commands...
The Benefits of 'D plan'

a) The assistants will make your load lighter / b) The leader will be able to stand the strain and
c) All the people will go home satisfied.

The heathen priest started his advices with God and finished with a condition by making all his advices subject to God's approval (so God commands). Jethro had nothing against the Israelites and their God. After all Moses was his son-in-law. There was no objection about this from God for this idea of delegation. The plan was made and executed in 24 hours time.

God the father sent His Son to this world. Jesus Himself delegated. In Acts, Seven volunteers were given the job of waiting on the tables. Apostle Paul and Barnabas were great fans of delegation. And Paul wrote a lot about this subject.

Leaders delegate for God's sake! Delegate before some expert or your doctor advices so. Your Father-in-law may not visit you :)

Labels: , , ,

மோசேக்கு வந்த மூணு Temptations

மோசேக்கு வந்த முக்கியமான மூணு Temptations

1.தன்னோட சொந்த பலத்தால எகிப்து மனுஷங்கள ஜெயிச்சு தன்னோட இஸ்ரவேல் மக்களுக்கு விடுதலை குடுக்கலாம்னு ஒரு சோதனை வந்தது. ஒருத்தனக் கொல்லவும் செய்துட்டார். ஆனா மாட்டிக்கிட்டார் மோசே. ஊத்திக்கிச்சு அவர் Plan.

2.மலை மேல இருந்து பத்துக் கட்டளைகளத் எடுத்துட்டு கீழே வர்றப்போ, ஆரோன் அன் கோ ஒரு தங்கக் கண்ணுக்குட்டிய செஞ்சு worship பண்ணிட்டு இருந்தாங்க. கடவுள் மோசே கிட்ட சொன்னார், “பேசாம இவங்களக் கட்டி மாரடிக்காம விட்டுட்டு வா. உன்னப் பெரிய தலைவனாக்கி உன் சந்ததிய பெரிய நாட்டுக்கு சொந்தக்காரங்களா மாத்திடுறேன்”

3.அப்புறமா குடிக்கத் தண்ணியில்லாத ஒரு சூழ்நிலையில, பாறைகிட்ட பேசு தண்ணி வரும்னு கடவுள் சொல்ல. மோசே பாறைய தன் கையில இருந்த குச்சியால அடிச்சுட்டாரு.

இரண்டாவது சோதனை தான் மோசேய ஒரு மகா லீடரா மாத்திச்சுதுன்னு நினைக்கிறேன். இங்கே கடவுளே சோதனைக்கான ஏஜண்ட் மாதிரி கேக்கறார், “விடு, இந்த ஜனங்கள அழிச்சுடறேன். உன்னப் பெரிய ஜாதியாக்கறேன்.” நம்மள மாதிரி ஆட்கள், “Praise the Lord.” னு சொல்லிட்டு நம்ம நாட்டுக்கு புது பெயர் புதுக் கொடி ன்னு ப்ளான் பண்ண ஆரம்பிச்சிருப்போம்.

மோசேயுடைய பதில் ஒரு Great Leader ஐ சாதா தலைவன்-ட்ட இருந்து பிரிச்சுக் காட்டிச்சுது. “உம்முடைய கோபத்தின் உக்கிரத்தை விட்டுத் திரும்பி, உமது ஜனங்களுக்குத் தீங்குசெய்யாதபடிக்கு, அவர்கள்மேல் பரிதாபங்கொள்ளும். உங்கள் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, நான் சொன்ன இந்தத் தேசம் முழுவதையும் உங்கள் சந்ததியார் என்றைக்கும் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு, அவர்களுக்குக் கொடுப்பேன் என்று உம்மைக்கொண்டேஅவர்களுக்கு ஆணையிட்டுச் சொன்னீரே என்று கெஞ்சிப் பிரார்த்தித்தான்” (யாத்திராகமம் 32:12-13).

மோசே தனிநாடு திட்டத்துக்கு ஒத்துக்க மாட்டான்னு கடவுளுக்குத் தெரியும் ஆனாலும் டெஸ்ட் பண்ணிப் பாத்தார். இது டெம்ப்ட்டேஷன் இல்ல டெஸ்ட். (தமிழ் சோதனைக்கு English-ல மூணு அர்த்தங்கள் இருக்கு Temptation / Test / Trial ) நம்மோட ஆவிக்குரிய வாழ்க்கையில நாம வளர்றப்போ, சாத்தானோ, கவர்ச்சிக் கன்னி/காளை, அல்லது கிறிஸ்தவ skits ல காட்றா மாதிரி சிகரெட், பாட்டில், சினிமா இப்படி சோதனைகள்(Temptations) மட்டும் வராது. ஜெபம் பண்றப்போ, பைபிள் வாசிக்கிறப்போ, கிறிஸ்தவ மீட்டிங்கள்ல மெசேஜ் கேட்டுட்டு இருக்கறப்போ கூட Test கள் வரலாம்.

ஆன்மீக வாழ்க்கையிலேயும் தலைவர் பதவியிலேயும் நம்ம சூழ்நிலையில, நம்ம தகுதிக்கு, கடவுள் நம்மளயும் தலைவர்களா மாத்துவாரு. மோசே மாதிரி தலைவர்கள் பலகீனம் உள்ளவங்க தான். நம்மளப் போல மனுஷங்க தான். அவங்க தியாகமும், தைரியமும் கடவுளோட சித்தமும் கிருபையும் சேர்ந்து எவ்வளவோ சாதிச்சிருக்காங்க.

வில்லியம் கேரியோட மந்திரம் எனக்கு அதிக உற்சாகம் தரக்கூடியது. உங்களுக்கும் தான்:

“Attempt great things for God
Expect great things from God”

Labels: , , , ,

Thursday, September 06, 2007

Sorry about the picture. you can turn your head to view that.

The following one is dedicated to one of my friend and fan Allwyn (Nettai)

but this one is about each one of you.

Nobody like you
One among the very few
Preachin from the pew
Always new like the dew
Standing in a queu
In doing good
As though it is due
Taking different view.

I will be a diver to pick a pearl like you
Become a astronomer to peer at a star like you
Don't mind living in the wild to smell a flower like you
Willing to die to fly with an angel like you

All my life i wanted to see a heart of Gold
You touched and made my heart Gold
Tried and polished many rocks and stones
You are the diamond which polished me when it shone

I always wanted to be greater than my teachers
You made me both a student and a teacher
Breaking my own records
Cracking all the codes


Hi,

I will try to update my personal stuff.

Now i am in Tirunelveli and try to discipline myself to write.

Please keep in touch, visit my blogs/website and give my your feedbacks.


Bye for now.

Love,

Michael.

Tuesday, September 04, 2007

I gathered some stuff from the tube, prepared them with my gray matter in the upstairs and heated them up in my PC now it is your turn to taste and comment.

The other day in a Tamil talk show called 'Arattatai Arangam'. A girl mentioned about her father who had left her and her mother to live with another woman.
The host asked,"What is your father?" She said, "He is a Pastor."

What about the promise he made in a Church to Keep her with him till death do them part... 'i do' 'i do'(I have never got that sentence correct :) sorry ). What about his position of marrying (that is conducting wedding services) many couple as a pastor?

There was a 62 year old temple priest who sexually abused a 12 year old girl who went to worship. And he is now in prison.

In the land where we sing 'Both god and child are the same' and regard ladies equal
to god, there is a man who worships and helps worship others did this unholy act.
Why are the so called spiritual leaders are like this?
What is the almighty doing?
What shall the common man do about it?

Why don't we become a priest and a pastor?
Our body is a temple and we are the Worshippers as well as the worship leaders.
May be that will bring more sacred temples to the sanctuaries.

I dare you to become your own temple

I gathered some stuff from the tube, prepared them with my gray matter in the upstairs and heated them up in my PC now it is your turn to taste and comment.

The other day in a Tamil talk show called 'Arattatai Arangam'. A girl mentioned about her father who had left her and her mother to live with another woman.
The host asked,"What is your father?" She said, "He is a Pastor."

What about the promise he made in a Church to Keep her with him till death do them part... 'i do' 'i do'(I have never got that sentence correct :) sorry ). What about his position of marrying (that is conducting wedding services) many couple as a pastor?

There was a 62 year old temple priest who sexually abused a 12 year old girl who went to worship. And he is now in prison.

In the land where we sing 'Both god and child are the same' and regard ladies equal
to god, there is a man who worships and helps worship others did this unholy act.
Why are the so called spiritual leaders are like this?
What is the almighty doing?
What shall the common man do about it?

Why don't we become a priest and a pastor?
Our body is a temple and we are the Worshippers as well as the worship leaders.
May be that will bring more sacred temples to the sanctuaries.

I dare you to become your own temple